கோயில் திருவிழாவில் தகராறு; அண்ணன், தம்பி மீது தாக்குதல்

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை குறிஞ்சி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் தனது பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த 11-ம் தேதி இரவு சாமி ஊர்வலம் விநாயகர் கோயில் அருகே சென்றபோது, மேளம் வாசித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக கூறி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மேளம் இல்லாமல் ஊர்வலத்தை தொடர விழா அமைப்பாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல், மேளம் இல்லாமல் சாமி ஊர்வலம் செல்லக்கூடாது எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Advertisement

இதனை முருகன் தட்டிக்கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஒருவர் கையில் அணிந்திருந்த காப்பால் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

முருகனை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரர் கணேசனையும் செங்கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கணேசனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...