யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

விழாவில் செய்தியாளரகளை சந்தித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், தீர்ந்து போன கட்சி எது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். சிலரால் விமர்சனங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்கள் நாங்கள் என மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளித்தார்.

தமிழக முதலமைச்சர் முழுமையாக மக்களுக்கான சேவையையே செய்து வருகிறார் என்றும் அனைத்து துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுப்பணித்துறை அமைச்சர் ஏற்கனவே (Open Tender) முறையை அறிவித்துள்ளார். அதன்படியே மாநகராட்சியிலும் திறந்தவெளி டெண்டர் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

Advertisement


கோவை மாநகராட்சி வாகனங்கள் சுடுகாட்டில் நிறுத்தப்படுவதாக தொழிலாளர் அமைப்புகள் எழுப்பியுள்ள புகார் குறித்து கேள்விக்கு, இது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன். அதேபோல், மாநகராட்சியில் தூய்மைப் பணிக்காக நியமிக்கப்பட்ட 325 பேர் துப்புரவுப் பணியில் ஈடுபடாமல் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். “இந்த விவகாரம் குறித்து நிச்சயமாக ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

விநாயகர் சதுர்த்தி- கோவையில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...