குடும்ப தலைவிகளுக்கு 2000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து- முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் EPS…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதன்படி குலவிளக்கு திட்டம், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து, அனைவருக்கும் வீடு, ஊரக வேலைவாய்ப்பு தினங்கள் உயர்வு, அம்மா இருசக்கர வாகன திட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மகளிர் நலன் (குல விளக்குத் திட்டம்) திட்டத்தில், சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மூலம் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம்) திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் அதனை 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

செவிலியர்களுக்கு விரைவில் நல்ல முடிவு… கோவையில் அமைச்சர் அருண்ராஜ் உறுதி!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், செவிலியர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வருடன் ஆலோசித்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...