கோவை: கோவை அரசு மருத்துவமனை முன் காயத்துடன் உதவி கேட்ட முதிய யாசகரை ஒருவர் தாக்கி, தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த முதிய யாசகரை ஒருவர் காலால் எட்டி உதைத்து, கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்ற முதியவர், வறுமை காரணமாக சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காலில் காயத்துடன் உணவு மற்றும் உதவி தேடி கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள நடைபாதைக்கு வந்துள்ளார். அங்கு பொதுமக்களிடம் உதவி கேட்டு சென்றபோது, அங்கிருந்த ஒருவர் அவரிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
VIDEO
காயத்துடன் உதவி கேட்ட முதியவரை அந்த நபர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மீது தண்ணீர் ஊற்றி அங்கிருந்து விரட்டியதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பசியாலும் காயத்தின் வலியாலும் அவதிப்பட்டு உதவி கேட்ட முதியவரிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மக்களும், நெட்டிசன்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Update:-
News Clouds Coimbatore செய்தியின் எதிரொலியாக சமூக ஆர்வலர்கள் சிலர் முதியவரை மீட்டனர். ஆனால், சிகிச்சைக்கு முன்பே முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.





