கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்? எங்கு எத்தனை வாக்காளர்கள்?

கோவை: கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பவன்குமார் வெளியிட்டார்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, கூடலூர் நகராட்சியில் 23வது வார்டில் 1,251 வாக்காளர்களும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2 வது வார்டில் 2,503 வாக்காளர்களும். கோயம்புத்தூர் மாநகராட்சியில் 56 வது வார்டில் 18,194 வாக்காளர்களும், செட்டிப்பாளையம் பேரூராட்சியில் 4 மற்றும் 10வது வார்டுகளில் 1,602 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், பொள்ளாச்சி நகராட்சியில் 21, 7, 12வது வார்டுகளில் 5,916 வாக்காளர்களும், நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியில் 13வது வார்டில் 1,401 வாக்காளர்களும், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2வது வார்டில் 1,180 வாக்காளர்களும், தாளியூர் பேரூராட்சியில் 3வது வார்டில் 1,015 வாக்காளர்களும், தென்கரை பேரூராட்சியில் 1வது வார்டில் 595 வாக்காளர்களும்,

கோட்டூர் பேரூராட்சியில் 15வது வார்டில் 1,343 வாக்காளர்களும், வேடப்பட்டி பேரூராட்சியில் 11வது வார்டில் 738 வாக்காளர்களும் என மொத்தம் 35,738 வாக்காளர்கள் உள்ளனர்.

11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 37 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிஎஸ்ஜி மருத்துவமனையில் மனநல மருத்துவ கருத்தரங்கு… தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்பு…

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்ற மனநல மருத்துவ கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...