கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா கோலாகலமாக நடைபெற்றது. பாரம்பரிய உடைகள், செண்டை மேளம், நடனங்கள், விளையாட்டுகள் மற்றும் ஓண சத்யா விருந்துடன் மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
9 மாதம் EMI கட்டி வாங்கிய கல்லூரி மாணவரின் R15 பைக்கை கோவையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஹெலிகாப்டரில் மாவேலி அரசன் வருகை தந்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஓணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ரூ.1-க்கு BSNL சிம் கார்டு வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 24 நாட்களுக்கு Unlimited Calls, தினசரி 1GB Data மற்றும் 100 SMS உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி சிங்காநல்லூர் குளக்கரையில் வக்கீல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குளத்தின் நிலை, சாலைப் பணிகள் மற்றும் கழிவுநீர் கலப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட 2,100 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மணிகண்டன், சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 181 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, தேனியைச் சேர்ந்த 39 வயது நபரை கைது செய்தனர்.
கோவில்பாளையம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோ கஞ்சாவை கோவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்து, 21 வயது இளைஞரை கைது செய்தனர்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தின் நிலைப்பாட்டை மீறி அணை கட்ட முடியாது என்றும் கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.