கோவையில் தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைத் தொடர்ந்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் ஜூன் 15 அன்று நடைபெறும் Yatri Suvidha Diwas நிகழ்ச்சியில் கண் பரிசோதனை, ரத்ததான முகாம், வேலைவாய்ப்பு ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்களில் சிறந்து விளங்கிய பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சினிமா பிம்பம் குறித்து பாஜக விமர்சனம் செய்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் குறித்த கேள்வியை எழுப்பி அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.