கல்லூரி வாழ்க்கை வீணாகிவிட்டது: கோவை மாணவர்கள் வேதனை!

கோவை: உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பாரா மெடிக்கல் கல்லூரியால், 3 வருட கல்லூரி வாழ்க்கை பாழாகிவிட்டதாக மாணவர்கள் வேதனையுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில்மனு அளிக்க வந்தனர்.

Advertisement

அப்போது அவர்கள் கூறுகையில்,

“இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிம்க்கிறோம். இங்கு, பிஎஸ்சி ரேடியாலஜி, டிப்ளமோ ஆப் நர்சிங், பிஏஎம்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லூரி உரிய அங்கீகாரம் பெறாமல் நடத்தி வந்தது எங்களுக்கு தெரிய வந்தது.

கல்லூரி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஒரு பேட்ச் கூட மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை. ஏற்கனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தில் பாராம் மெடிக்கல் படித்த எங்கள்து மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கை பயனில்லாமல் உள்ளது.எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று கல்லூரியை ஏற்பாடு செய்து கொடுத்து, எங்கள் கல்லூரி கனவை நிறைவேற்றித்தர வேண்டும்.” என்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஈஷா – கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...