கோவையில் 84.67% வாக்குப்பதிவு; எந்த தொகுதியில் எத்தனை பேர் வாக்களித்துள்ளனர்? முழு விவரம்

கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவையில் 84.67% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. எந்த தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கோவையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதனிடையே மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 84.77% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தொகுதி வாரியாக வாக்காளர் விவரங்கள் மற்றும் சதவிகித விவரங்கள் பின்வருமாறு:-

Advertisement

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 2,82,179 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,42,476 பேர் வாக்களித்துள்ளனர். இது 85.93% ஆகும்.

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 3,76,616 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,71,656 பேர் வாக்களித்துள்ளனர். இது 88.31% ஆகும்.

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 4,22,138 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,61,223 பேர் வாக்களித்துள்ளனர். இது 85.57% ஆகும்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 2,96,939 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,24,694 பேர் வாக்களித்துள்ளனர். இது 75.67% ஆகும்.

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,93,324 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,56,776 பேர் வாக்களித்துள்ளனர். இது 874.54% ஆகும்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் 1,88,878 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,55,163 பேர் வாக்களித்துள்ளனர். இது 82.15% ஆகும்.

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 2,69,941 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,19,165 பேர் வாக்களித்துள்ளனர். இது 81.19% ஆகும்.

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் 3,05,878 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,66,450 பேர் வாக்களித்துள்ளனர். இது 87.11% ஆகும்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் 2,03,971 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,79,678 பேர் வாக்களித்துள்ளனர். இது 88.09% ஆகும்.

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் 1,73,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,49,147 பேர் வாக்களித்துள்ளனர். இது 85.91% ஆகும்.

கோவையில் மொத்தமாக 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23,26,489 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தமாக 84.67% ஆகும்.

தொகுதி அடிப்படையில் பார்க்கும்போது, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 88.31% பேர் வாக்களித்துள்ளனர். குறைந்தபட்சமாக கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 75.67% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...